கஜினி முகமது : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலாற்று உண்மை.!!!

மார்ச் 19, 2010

கஜினி முகமது :

தோல்வியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் வரலாற்றில் இருப்பவன் முகமது கஜினி. இந்தியாவுக்கு 16 முறை படையெடுத்து தோல்வியடைந்து மீண்டும் 17-வது முறை வெற்றி கண்ட மாவீரன் என்று இன்றும் பள்ளி புத்தகங்களில் வர்ணிக்கப்படுபவன். ஆனால் உண்மையில் கஜினியின் முதல் படையெடுப்பே வெற்றி தான்.

காபூல் நகருக்கு தெற்கே கி.பி.998 ஆம் ஆண்டு கஜினி என்ற நகரை ஆண்டு வந்தான் கஜினி முகமது..அந்த காலகட்டத்தில் இந்தியா என்றால் அனைவருக்கும் ஒரு வித மயக்கம் இருந்து வந்தது. அந்த மயக்கம் முகமது கஜினிக்கும் வந்தது. மாபெரும் படையுடன் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து சிந்து நதியை கடந்து பஞ்சாப் பீடபூமியை நோக்கி முன்னேறினான். அவனையும் அவனுடைய மாபெரும் படையை தடுத்து நிறுத்தினான் பஞ்சாப் மன்னன் ஜெயபாலன்..ஆனால் அசுரத்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஆப்கன் படையிடம் ஜெயபாலன் படையினரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. முதல் போரிலேயே மாபெரும் வெற்றி பெற்ற ஆப்கன் படையினர் பஞ்சாப் நகரை சூரையாடினார்கள். கொள்ளையடித்த செல்வத்தை ஒட்டகங்களில் ஏற்றவே பல மணி நேரம் செலவிட்டது ஆப்கன் படை.

கஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்து போய்விட்டது. கி.பி.1000-ல் ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு படையெடுப்பதை ஒரு திருவிழாவாக கொண்டாடினான். ஒவ்வொரு முறையும் இதே கதை, கொலை, கொள்ளை பின்னர் ஊர் திரும்புதல்.. சௌராஷ்டிரா, கன்னோசி, மதுரா என வரிசையாக கொள்ளை மற்றும் கொலைகள். கஜினிக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு, தான் வெற்றி பெற்ற மன்னர்களின் விரல்களை வெட்டி சேகரித்து வைத்து கொள்வான். அப்படி சேகரித்தவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

இறுதியாக கி.பி. 1025- ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் பாலைவனத்தை கடந்து குஜராத் நகருக்குள் அடிவைத்தான். அந்தரத்தில் தொங்கும் சிவலிங்கத்தை கொண்ட புகழ் பெற்ற சோமநாதர் ஆலயத்தை நோக்கி மாபெரும் படையுடன் வந்தான். கோயில் தானே என்று அலட்சியம் செய்தவனுக்கு காத்திருந்தது மாபெரும் ஆச்சர்யம்.. ஊர் மக்கள்

ஆயிரக்கணக்கில் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை எதித்து நின்றார்கள்..ஆனால் அசுரத்தனம் நிறைந்த அவன் படை முன்பு ஆன்மீக வீரம் எடுபடவில்லை. அனைவரையும் வெட்டி சாய்த்தான்.. சிவலிங்கத்தை கீழே போட்டு உடைத்து மாபெரும் வெற்றிச் சிரிப்புடன் நின்றான். அன்று அவன் கொள்ளை அடித்த தங்கத்தின் அளவு மட்டும் 6 டன்.

அன்று அவ்வளவு புகழ் பெற்ற கோயிலை சூறையாடியதால் தான் கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதை மட்டும் பெறியதாக எடுத்து கூறினார்கள். அதற்கு முன் கஜினி செய்த அத்தனை அநியாயங்களும் இந்த செயலால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.. இன்றும் நாம் வரலாற்றை தவறாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

–மதன்


தாஜ் மஹால்

மார்ச் 19, 2010

தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.

இப்ப விஷயத்துக்கு வருவோம்.

நம்ம பள்ளிக்கூட காலத்துலேர்ந்து படித்துக் கொண்டு வருவது என்னவெனில்:

தாஜ் மகாலை கட்டியது ஷாஜஹான். அவரது மனைவி மும்தாஜின் நினைவாய் அவர் இதைக் கட்டினார். இதை வடிவமைத்தவர் இரான் நாட்டைச் சேர்ந்த உஸ்தாத் இசா என்பவர். தாஜ் மகாலை கட்ட 22 ஆண்டுகள் பிடித்தது. தாஜ் மஹால் கட்டப் பட்ட காலம் கிபி 1631 – 1653. சுமார் 20000 பேர் இதற்காக உழைத்தனர்.

இப்ப இதைக் கேளுங்க

பேராசிரியர் பி. என். ஓக் என்ன தன்னோட புத்தகம் “Taj Mahal : The True Story” தனில் என்ன சொல்றார்னா…

தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) “ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்”. எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.

முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.

பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.

மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.


இணையத்தில் அம்பலமான சாய்பாபா

மார்ச் 18, 2010

இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை

இணையத்தில் அம்பலமான சாய்பாபா

கடவுள் அவதாரம் எனக்கூறிக் கொள் ளும் சாயிபாபாவை பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தி வருவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல முறை சாயிபாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். பாபா செய்யும் மேஜிக்கு களை தி.க. பிரச்சாரகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்து காட்டி வருகின்றனர். நாம் இப்படிப் பகுத்தறிவு பரப்புரைகளை செய்து வரும் நிலையில் சாயிபாபாவின் முன்னாள் சீடர்கள் இணைய தளத்தில் இந்த வேலையை செய்து அசத்தியுள்ளனர். முன்பு ஒரு முறை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சாயிபாபா முன்னாள் சீடர் மலேசியாவைச் சேர்ந்த ஹரிராம் ஜெயராம் என்பவர் சாயிபாபா வின் மோசடி குறித்து தனது கருத்தை கடிதம் வழி எழுதியிருந்தது இங்கு நினைவு கூறத் தக்கது.

இப்போது இவரைப் போன்றே சில சீடர்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த தனி இணைய தளத்தையே துவக்கியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதிலுள்ள படங்க ளையே இங்கே கொடுத் திருக்கிறோம். வீடியோ படமாக இணையத்தில் இந்தப் படம் வழங் கப்பட்டுள்ளது.

சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறை யச் செய்திகள் காணப் படுகின்றன.

1960-களிலேயே அங்கொன் றும் இங்கொன்றுமாகச் சில கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இணைய தளத்தில், டேவிட், மற்றும் பயே பெய்லி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் (Findings) எனும் அதிகார பூர்வமான ஆவணம் இங்கு முதல் இடத்தைப் பெறுகிறது. அது இணைய தளத்தில் தோன்றியது முதல் பல செய்திகள் அடுத்தடுத்து வந்தன. பக்தர்கள் கோபத்துடனும் குழப்பத்துடனும் தங்களுடைய நிலையை வெளிப்படுத்தினர். ஆனால் சாய்பாபாவின செயல் களுக்கு இலக்கானவர்கள், அவற் றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பாராட்டுதல்களைத் தெரிவித்த னர்; இதுவரை எதையும் வெளிப் படுத்தாமல் இருந்தவர்கள், இப் பொழுது தைரியமாகத் தங்களு டைய அனுபவங்களைகூட முன் வந்தனர். டேவிட் மற்றும் ஃபாயே பெய்லி நீண்டகாலம் சாய்பாபா வின் பக்தர்களாக இருந்தவர்கள். தவறான பாலியல் உறவு, மோசடி, கொடுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றுடன், சாய் பாபாவைக் கொலை செய்ய முயன்ற ஒரு செய்தியை அவர்கள் சொல்லு கிறார்கள். அதன் விளை வாகப் பல முக்கியமானவர்கள் சாய்பாபா இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.

பெய்லியின் கண்டுபிடிப்பு களும், அவற்றிற்கு முன்னும் பின் னும் சொல்லப்பட்ட ஒவ்வொன் றும் இந்த இணையதளத்தில் ஆங்கில மூலத்தில் தரப்பட்டிருக் கிறது. முந்தைய பக்தர்கள் டச்சு மொழியில் கொடுத்துள்ள செய்தி கள் ஆங்கில மொழி பெயர்ப்பு களாகத் தரப்படும். சொல்லப்படும் செய்திகளை நம்ப முடியாமல் தலையாட்டுப வர்கள்கூட, திறந்த மனத்துடன் இணைய தளத்தைத் தொடர்ந்து படிப்பார்கள் என நம்புகிறோம். தங்களுடைய சொந்த ஆராய்ச் சியை மேற்கொள்ளத் தொடங்க ஆவல் கொள்ளுவார்கள் எனவும் நம்புகிறோம். உதவி செய்யவும் மேற்கொண்டு தகவல்களைத் தரவும் பலர் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

பாபாவின் போதனைகளில் முக்கியமாக வரும் பாலியல் பக்த ரின் ஆன்மீகக் கண்ணோட்டத் தைக் குறைந்துவிடுகிறது. அவரின் ஆஸ்ரமத்தில் ஆண்களும் பெண் களும் தனித் தனியாகத்தான் தங்க வைக்கப் படுகின்றனர். திருமண மான தம்பதிகள் மட்டும் சேர்ந்து இருக்கலாம். கடந்த சில ஆண்டு களாக இது மாறிவிட்டது. ஆண் பக்தர்களை மட்டும் பாபா தனியாக அழைத்து தரிசனம் தருகிறார். அப்போது எவரும் உடன் இருப்பதில்லை. எந்தப் பெண்ணையும் அவர் தனியாக அழைத்துப் பேசுவதில்லை.

பாபாவின் ஓரினச் சேர்க்கை பற்றி முதன் முதலாக எழுதிய அமெரிக்கக தால் ப்ரூக் 1970-71-இல் பாபாவுடன் ஒன்றரை ஆண்டுகள் தங்கி யிருந்தார். தனி தரிசனங்களின் போது பாபா அவரைத் தழுவிக் கொண்டு அவரது பாலுணர்வைத் தூண்டினார் என்று அவர் கூறினார். 1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சினையை எழுப்பினர். சாயிபாபா தங்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த போது, பாபா தங்களைக் கெடுத்து விட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் ஹார்ட் என்பவர் 1990 இளவேனில் காலத்தில் பாபாவைத் தனியாகச் சந்தித்தபோது அவரைத் தழுவிக் கொண்ட பாபா அவரின் உறுப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினை ஹாலந்தில் 1992 ஜனவரியில் பேசப்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு இதுபோன்ற பல கதைகள் வெளிவந்தன. இண்டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து 20 புகார்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றில் 10 நிகழ்ச்சிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களே நேரில் கூறியுள்ளனர். மற்ற 10 நிகழ்ச்சிகளில் இரண்டாம் தரப்பு மனிதர்கள் தகவல் தந்துள்ளனர். இத்தகைய தனிச் சந்திப்புகளின்போது பாபாவுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த தால் ப்ரூக், சாம், யங், 15 வயதுச் சிறுவன், ஸ்வீ டன் நாட்டைச் சேர்ந்த கான்னி லார்சன் இங்கிலாந்தின் கெயித் ஹார்டு, இரானின் செயித் கொராம் ஷெகல், ஜெர்மனியின் ஜென்ஸ் சேத்தி, ஆஸ்திரேலி யாவின் ஹான்° டி க்ரேகர் ஆகிய 8 பேர் நேரடியாகத் தகவல் தந்துள்ளனர். பாபாவுடன் 16 ஆண்டுக ளாகப் பாலியல் உறவு கொண்ட தாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பாடியா தெரிவித்துள் ளார். 1986-இல் பாபாவைச் சந் தித்த 23 வயது ஸ்வீடன் இளை ஞர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்), இங்கிலாந்து நாட்டு மைக்கேல் பெண்டர் (பின்னர் தற்கொலை செய்து கொண் டார்) 1989-இல் பாபாவைப் பலமுறை தனியாகச் சந்தித்தவர், ஸ்வீடன் நாட் டைச் சேர்ந்த 18 வயதுச் சிறுவன் 1998-1999-இல் பாபாவை 8 முறை தனியாகச் சந்தித்தவன், மற்றும் இந்திய மாணவர்கள் பலரும் சாய்பாபா தங்களுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டு தகவல் தந்துள்ளனர். பாபாவைத் தனியாகச் சந்தித்த போது தங்களின் உறுப்புகளைத் தூண்டிவிட்டதாக அbரிக்கா வின் எம்.டி., ஜெட் கெயர்ஹான், நெதர்லாந்தின் மாத்திஜிஸ் வான் டெர் மீர், இங்கிலாந்தின் டேவிட் பால் டிப்மெக் ஆகியோர் தகவல் தந்துள்ளனர். இவை தவிர பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்க ளின் குடும்பத்தினர் என ஏராள மானவர்களின் குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் குவிந்துள்ளன. அத்தனையும் எழுத பக்கங்கள் போதாது. என்றாலும் உண்மை தொடர்ந்து அவைகளை வெளி யிடும். வெகு மக்களைச் சென்றடை யும் ஊடகங்கள் இது போன்ற உண்மைகளை வெளியிடத் தயங் குகின்றன. டெகல்கா.காம் இணைய தளம் பா.ஜ.வினர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல் இந்த சாய்பாபா முன்னாள் சீடர்களின் இணையதளமும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இளையமகன்

கு.வெ.கி.ஆசான், த.க.பாலகிருட்டிணன் உதவியுடன்.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ் (2004 அக்டோபர் 1-15)


இப்படித்தான் அம்பலமானார் சாய்பாபா

மார்ச் 18, 2010

படவிளக்கம்:
1. முதலில் தண்ணீர் குடிப்பது போல பாவனை
2.லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைக்குட்டையை கையிலெடுக்கிறார்.
3. வாயைத் துடைப்பது போல் பாவனை
4. அப்படியே லிங்கத்தை வாயினுள் திணிக்கிறார்.
கவனிக்க: இடதுகை விரல்கள்
5. வாய்க்குள் லிங்கம் சென்றதும் முகத்தைத் துடைப்பது போல் ஒரு நடிப்பு.
6. மீண்டும் தண்ணீர் நடிப்பு
(5,6,7-படங்களில் கவனியுங்கள் உதவியாளரின் பரபரப்பு.)

7. வாந்தி எடுப்பது போல் நடிப்பு
8, 9 வாயில் வைத்திருந்த லிங்கம் வெளியே வருகிறது.


சாயிபாபா

மார்ச் 18, 2010

சாயிபாபா பாணியில் திருநீறு வருவித்துக் காட்டுதல்

தன்னைத்தானே அவதாரம் என விளம்பரப் படுத்திக் கொள்ளும் சாயிபாபா செய்வது போலவே சாதாரண மந்திரவாதியும் திருநீறு வருவித்துக் காட்டுகிறார்.

அவரது உள்ளங்கை கீழ்நோக்கி இருக்க, கையை இரண்டு மூன்று முறை வட்டவடிவில் அசைக்கிறார். பின் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவரது விரல் நுனிகளில் இருந்து திருநீறு கொட்டுகிறது. இந்த திருநீற்றின் தரமும் மணமும் கூட சாயிபாபா வழங்கும் திருநீற்றின் தரத்திலேயே உள்ளது. ஏனெனில் இந்த சாமியார் திருநீறு வாங்கும் அதே கடையிலிருந்துதான் இந்த மந்திரவாதியும் திருநீற்றை விலைக்கு வாங்குகிறார்.

தேவையான பொருள்கள்: வாசனை விபூதி, அரிசிச்சோறு வடித்ததில் இருந்து பெறப்பட்ட கஞ்சி, விபூதியை வில்லைகளாக தயாரித்துக் கொள்ள ஒரு தட்டு.

செய்முறை: வாசனைத் திருநீற்றை அரிசிக் கஞ்சி நீரில் கலந்து, சிறு வில்லைகளாக செய்து காயவைக்கவும். இந்த வில்லையைக் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் மறைத்துக் கொள்ளவும். விரைப்பாக வைக்காமல் கையைத் தளர்த்தி வைத்துக் கொள்ள பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

விபூதி வில்லையைப் பார்வைக்குப் படாமல் விரலிடுக்கில் ஒளித்து வைத்திருக்கும் நிலையிலேயே வணக்கம் சொல்லவும், கை குலுக்கவும், காப்பி குடிக்கவும், சாப்பிடவும், எழுதவும் கூட விரல்களையும் கைகளையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகி இருக்க வேண்டும். பின் கைகளைச் சுழற்றுங்கள். உள்ளங்கை கீழே போகட்டும். விரைந்த அசைவில் விபூதிக் குளிகையை விரல் நுனிகளுக்குக் கொண்டு வாருங்கள். பொடித்தூளாக நுணுக்குங்கள். பக்தரின் கைகளில் உதிருங்கள்.

மந்திரவாதியின் இதே கைச்சால முறையைச் சாமியார் பயன்படுத்துவதில்லை என்றால் பின் ஏன் அவர் சோதனைக்கு உட்பட மறுக்கிறார்? தனது முறை கைச்சால வித்தை அல்ல என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மெய்ப்-பிக்க வேண்டாமா? எதைக் குறித்து அவர் அஞ்சுகிறார்? தான் அம்பலப்பட்டு விடுவோம் என்றா? மோசடிக்கு இடம் தராத நிலைகளின் கீழ், அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, அவரது சக்திகள் அறிவியலுக்கும் மனித புரிதல் திறனுக்கும் அப்பால் பட்டவை என மெய்ப்பிக்க மட்டுமே கைத்திற முறையைத் தாம் கையாளவில்லை என்பதை அவதாரங்கள் முதலில் மெய்ப்பித்தாக வேண்டும்.

இந்த வித்தையை அம்பலப்படுத்த, மனிதர் தம் கைகளை வட்டமாக ஆட்டி, அதே போது தூள் செய்வதற்காக வில்லைகளை விரல்களுக்குக் கொண்டு வரும் நேரம் பார்த்து கையைத் தட்டிவிட்டால் போதும், வில்லை கீழே விழுந்து, அவர் அம்பலப் படுவார்.

கைச்சால வித்தை

கைச்சாலம் என்றால், தம் செய்முறையைப் பிறர் அறிய முடியாத அளவுக்கு மிக வேகமாக வித்தைகளைச் செய்யும் திறன் இந்தக் காரணத்துக்காகத்தான் கைகளையும் உடலையும் அசைக்கிறார்கள். பொருள்களைப் படைத்துக் காட்டுதல், பொருள்களைத் தோற்றுவித்தல், மறைய வைத்தல், ஒன்றை இன்னொன்றாக உருமாற்றுதல் முதலிய சால வித்தைச் செயல் பாட்டை மறைக்க இந்த உடலியக்கம் உதவு கிறது.

———–நன்றி:- பி.பிரேமானந்து “அறிவியலா, அருஞ்செயலா”