சேதுசமுத்திர திட்டத்தால் கப்பல்களின் பயண நேரம் மிச்சப்படும் என்று அரசாங்கம் சொல்கிறது. 36 மணி நேரம் மிச்சப்படும் என்று பாலு சொல்கிறார். ஆனால், உண்மை என்ன?
இந்த திட்டத்தின் விரிவான அறிக்கையை பார்த்தால் அதில் கண்டபடி, கப்பல்களின் பயண நேரம் அதிகபட்சம் 30 மணி நேரம் மிச்சமாகலாம் – அதுவும் தூத்துகுடியிலிருந்து சென்னைக்கு வரும் கப்பல்களுக்கு மட்டும்.
இந்த விரிவான அறிக்கையை பார்த்தால் – இந்தியாவின் கிழக்குகரையிலிருந்து மேற்கு கரைக்கு செல்லும் கப்பல்களைத்தவிர யாருக்கும் ஒருபெரிய லாபமும் இதனால் இல்லை.
ஐரோப்பா, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கப்பல்களுக்கு பயண சேமிப்பு வெறும் 8 மணி நேரம்தான். இந்த விவரம், இந்த திட்ட விரிவு அறிக்கையில் இல்லை (இந்த அறிக்கை திட்டம் நடத்தும் எல்&டி நிறுவனம் தயாரித்தது).
அரசாங்கத்தின் / எல்&டியின் திட்ட அறிக்கையில் எல்லா கப்பல்களும் தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரியிலிருந்து கிளம்புவதாக அனுமானம் செய்திருக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல.
கன்னியாகுமரி அல்லது சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல்களுக்கு பயண நேரம் – 10 முதல் 30 மணி நேரம் மிச்சமாகும். அதற்கு மாறாக, மொரீஷியஸிலிருந்து கல்கத்தா செல்லும் கப்பல்கள் போல சில பயணங்களுக்கு பயண நேரம் அதிகமாக ஆகுமே தவிர குறையாது.
இந்த திட்ட அறிக்கையின் படி, ஒரு கப்பல் 18,000 டாலர் (7.4 லட்சம் ரூபாய்) மிச்சம் (எரிபொருள் சேமிப்பு) பிடிக்கும்.
இந்த திட்ட அறிக்கையில், இந்த சேமிப்பின் 50 சதவீதத்தை கட்டணமாக வைக்கப்போவதாக சொல்கிறார்கள்.
ஆனால், ஐரோப்பா, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கப்பல்களுக்கு இந்த திட்டத்தால் வெறும் 3,000 டாலர் (1.6 லட்சம்) மட்டுமே மிச்சமாகும்.
அதனால், இந்த திட்ட அறிக்கையின்படி கட்டணம் போட்டால், இந்த மாதிரி ஐரோப்பா, ஆப்பிரிக்க கப்பல்களுக்கு உண்மையில் 5,000 டாலர் (2 லட்சம் ரூபாய்) ஒவ்வொரு பயணத்துக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த ஐரோப்பா, ஆப்பிரிக்க கப்பல்கள் இந்த திட்டத்துக்கு முக்கியமா என்றால், ஆமாம் மிகவும் முக்கியம். திட்ட அறிக்கையில் 65% இந்த மாதிரி கப்பல் போக்குவரத்தைத்தான் அனுமானித்திருக்கிறார்கள்.
ஆதாயம் இல்லாததால், இந்த 65% கப்பல்கள் இந்த திட்டத்தை ஒதுக்கிவிடும்.
சரி, கட்டணத்தை குறைக்கலாம் என்று பார்த்தால், பிறகு இந்த திட்டம் போண்டியாகி விடுகிறது. இந்த திட்டத்தின் வருமானம் வருஷத்துக்கு 2.6% அளவே தருகிறது.
இந்த வருமானத்தை வைத்து சாதாரண பொதுநல திட்டங்கள் எதுவுமே எடுத்துக்கொள்ள மாட்டாது. இந்த திட்டம் சரிவர அளக்க்ப்படாமல் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டதால், இதில் இந்தியா மிகுந்த நஷ்டப்படும்.
இந்த திட்டத்தின் பல அடிப்படை அனுமானங்கள் மிகவும் தவறானவை.
இந்த திட்டத்தால் அரசுக்கு ஒரு பைசா திரும்ப கிடைக்கப்போவதில்லை. மாறாக, வருடா வருடம் மேலும் நஷ்டம் ஏற்படும். கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் வருஷம் நஷ்டம் ஏற்படும்.
இதைவிட, வருடம் இந்த 250 கோடி ரூபாயை தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களை மேம்படுத்தவும், இங்கு பயணிக்கும் கப்பல்களுக்கு சாதாரண கட்டணங்களை இன்னும் குறைக்கவும் வழி செய்தாலே மிகுந்த லாபம் ஏற்படும்.
– செய்திகளுக்கு ஆதாரம் எகனாமிக் டைம்ஸில் ஜாகப் ஜான் எழுதிய அறிக்கை.
அரசியல் லாபத்திற்காக யோசிக்காமல் செய்த இந்த திட்டம் முதலும் கோணல், முழுதும் கோணல். கருணாநிதியின் நினைவாக அவர் அரசியல் வாழ்வில் மறைந்த போதும் அவர் பெயருக்கு அவமானமாக இந்த திட்டம் விளங்கப்போகிறது.